Hjem கருத்துக்கள்

    கருத்துக்கள்

    படித்ததில் பிடித்தது

    விந்தை மனிதன் இணையத்திலிருந்து

    எமது போராட்டகாலத்துடன் ஒப்பிட்டு படிக்கையில் மனதில் நிற்கிறது படித்துப் பாருங்கள்

    அஸ்வத்தாமாக்கள் சாவதில்லை!

    அஸ்வத்தாமனின் மனம் எரிந்துகொண்டிருந்தது. தனிமையும், துக்கமும், நிராசையும், கோபமும் அவனை அலைக்கழிக்க தன்னை துரும்பாய் உணர்ந்தான். அவன் விழிகள் கண்ணீரும் ஆற்றாமையின் சுவாலையும் கலந்து ஜொலித்துக் கொண்டிருந்தன.




    'துரோகத்தால் என் வாழ்வு சிதைக்கப்பட்டுவிட்டது. நான் தனியனானேன். எல்லோரும் என்னைக் கொண்டாடிய காலம் கனவாய்ப் போய்விட்டது.

    Les mer …

    முள்ளிவாய்க்கால் சுற்றி வளைக்கப்படலாம் என்று முன்கூட்டியே சொன்னேன். செவி மடுக்கவில்லை. ஆடுகளம்’வ.ஐ.ச.ஜெயபாலன்


    கவிதையில் வேட்டைக்காரன்... இப்போது சினிமாவில் 'பேட்டைக்காரன்’!


    'ஆடுகளம்’ படத்தில் கிடா மீசையோடு சேவல் சண்டை வாத்தியாராக மிரட்டி இருக்கும் வ.ஐ.ச.ஜெயபாலன்இ ஈழத்துக் கவிஞர்களில் முன்னோடி. நேர்ப் பேச்சில் கலகலக்கவைப்பவர்.

    இதற்கு முன் நடித்த அனுபவம் உண்டா?


    ''நான் இதுக்கு முன்பு நடிச்சது இல்லை. என் தோற்றத்தைப் பார்த்துட்டுஇ வெற்றிமாறன் நடிக்கக் கூப்பிட்டார். 'மேடையில் நடிச்ச அனுபவம் எனக்கு இல்லை. ஆனா 87-ம் வருஷம் கல்யாணம் ஆனதுல இருந்து மனைவிகூட நடிச்சுக்கிட்டு இருக்கேன்’னு சொன்னேன். 'அது போதும் வாங்க’ன்னு சொல்லிட்டார். எனக்கு சாவித்திரிசுஹாசினிஜோதிகான்னு ஹீரோயின்களைத்தான் பிடிக்கும். அதனாலேயே என்னவோ என் உடல்மொழியில் சின்னதா பெண் தன்மை இருக்குன்னு சொன்ன வெற்றிமாறன் அதைத் திருத்தினார்

    மேலும்

     

     

    கலா அர்ப்பணம் 2011 பற்றிய எனது பதிவு-- :Sanjayan

     

    30. 4 அன்று கலா அர்ப்பணம் 2011  நிகழ்வுக்குப் போயிருந்தேன். அந் நிகழ்ச்சி பற்றிய பதிவே இது. இது விமர்சனம் அல்ல. அதற்கான காரணம்இ நடனம் பற்றிய அறிவற்ற ஞானசூன்யங்களில் நானுமொருவன் என்பதேயாகும்.

    நடனம் பற்றிய அறிவற்றவனே தவிர ரசிக்கும் தன்மை கொண்டவன் நான் என்றால் அது மிகையில்லை. இன்றைய மாலைப்பொழுது மிக அழகாகவும் மகிழ்ச்சியாகவும் கழிந்தது.விழாவின் ஆரம்பமே வித்தியாசமாய் இருந்தது. உள்ளூர் முக்கியஸ்தர்கள் பலர் மங்கள விளக்கேற்றினாலும் விழாக் குழுவினர் ”எல்லாளன்” பட இயக்குனர் திரு சந்தோஸ் அவர்களையும் மங்கள விளக்கேற்ற அழைத்து கௌரவப்படுத்தியது பாராட்டத்தக்க விடயமாகும்.நோர்வேக் கலைஞர்களாகிய வ.ஐ.ச ஜெயபாலனினதும் கார்மேகம் நந்தாவினதும் பல பாடல்கள் நடனங்களுடன் மேடையேற்றப்பட்டன. ”மனதில் உறுதி வேண்டும்” என்று பாடி ஆடிய சின்னஞ்சிறு குழந்தைகளிடம் பெரும் திறமை ஒளிந்திருக்கிறது. அதே சிறுமியரின் குறத்தி நடனமும் மிக மிக சிறப்பாக இருந்தது. சிறு குழந்தைகளைின் லாவகமானசெயற்கைத்தனமற்ற நடன அசைவுகள்.. அப்பப்பா... வார்த்தையில்லை பாராட்ட.

    Les mer …

    பின்பு அந்த இரகசியத்தை எந்திரன் பெற்றுக் கொண்டது......இப்பொழுது யாரிடம்...  ந.பத்மநாதன்


    இதைப் பார்ப்பதாயின் 70 களில் இருந்து பார்க்கவேண்டும்... எமக்குத் தலமை தாங்கியவர்கள் உண்மையைப் பொய்யென்று  பொய்யை உண்மை என்றும் சொல்லும் சட்டத்தரணிக்ளே .இவர்களின் அரசிய ல் எடுபடவில்லை.

    மேலும்

    புலம்பெயர் வாழ்வு -- 1

    புலம்பெயர் தமிழர் என்ற ஒரு அழகியல் கலந்த ஒரு பெயருடன் ஈழத்தில் வாழ்பவர்களின் எண்ணிக்கைக்கு சமமான எண்ணிக்கையுடன் ஐரோப்பா கனடா அமெரிக்கா என்று பரந்து பெருகி நீண்டகாலங்கள் ஆயிற்று ஆனாலும் எல்லாருக்கும் இந்த வாழ்க்கை பிடித்திருக்கிறதா என்றால் உடனடியாகப் பதில் சொல்ல முடியாதபடி ஏதோ ஒன்று நிச்சயமாகத் தடுக்கிறது.

    மேலும்

    மகிழ்ச்சிச் செய்திகள் அதிஸ்டவசமாக வீடு தேடி வருவதுண்டு

    Pathmanathan Nalliah

    சிலவேளைகளில் மகிழ்ச்சிச் செய்திகள், நிகழ்ச்சிகள் அதிஸ்டவசமாக வீடு தேடி வருவதுண்டு. அந்தவகையில் சுசிலா ராமனின் நிகழ்ச்சியைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்த்து வாழ்க்கையிலே மறக்கமுடியாது. அவரோடு அருகில் நின்று படம் எடுக்கும் சந்தர்ப்பமும் கிடைத்த்து.அந்த மகிழ்ச்சி மாறும் முன்பே இன்னொரு மகிழ்ச்சி ..

    தமிழ்நாட்டிலே சிறந்த இளையதலைமுறை இயக்குனர்களை சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. நோர்வேயில் வசிகரனாலும் அவர்களது நண்பர்களாலும் நடாத்தப்படும் தமிழ்த் திரைப்பட விருது விழா இன்று ஆரம்பம் … சென்றவருடம் 45 பேருடன் ஆரம்பிக்கப் பட்ட விழா இவ்வருடம் பலநூறு பேருடன் சிறப்பாக ஆரம்பமாகியது .

    Les mer …

    இன்றைய நவீன உலகில் மரணதண்டனை என்பது குறைவு.இருந்தாலும் அது மனிதாபிமான முறையில் இருக்கும்.ஆனால் புராதனகாலத்தில் ஏன்  19 ஆம் நூற்றாண்டு வரை பல்வேறு குற்றங்களை இழைத்த குற்ற வாளிகளுக்கு மரணதண்டனை மிககொடூரமான முறைகளில் நிறைவேற்ற ப்பட்டது. அப்படியான பிரபல பத்து வகை மரண தண்டனைகள்.

    Les mer …